Advertisment

நள்ளிரவில் நண்பர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நயன்தாரா: விக்னேஷ் சிவனை காணலையே!

நண்பர்கள் நயன்தாராவை கிண்டல் செய்ய அவரும் ஜாலியாக சிரித்துக்கொண்டே செல்கிறார்.

author-image
WebDesk
New Update
Nayanthara Ice

நயன்தாரா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நள்ளரவில் நடிகை நயன்தாரா தனது நண்பர்களுடன் ரோட்டோரம் உள்ள கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, கடந்த 2005-ம் ஆண்டு வெளியாக ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாரா, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, அவ்வப்போது முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், நயன்தாராவின் பெற்றோர்கள் கேரளாவில் உள்ளனர். அவ்வப்போது தனது பெற்றோரை பார்க்க கேரளாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா, தற்போது தனது தந்தையின் பிறந்த நாளுக்காக குடும்பத்துடன் கேரளா சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த அவர், நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக வெளியில் வந்துள்ளார்.

நயன்தாராவின் பேனரை பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் இவருவர், அவரை நேரில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டு திரும்ப அவர்களுக்கு அருகில் நயன்தாரா நிற்கிறார். இதை பார்த்து அவர்கள் ஷாக் ஆனாது போல் நயன்தாராவை கிண்டல் செய்ய அவரும் ஜாலியாக சிரித்துக்கொண்டே செல்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ட்ரிப்பில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பங்கேற்கவில்லை. தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.சி படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் படம் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவர் இல்லாமல் நயன்தாரா கேரளா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment