Advertisment

யார் வயசு அதிகம்? இந்த 'அதி முக்கிய' செய்தியை நெட்டிசன்கள் ராப்பகலா தேடி இருக்காங்க!

தற்போது நெட்டிசன்கள் பலரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் வயது வித்தியாசம் தொடர்பான தகவல்களை தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
May 29, 2023 15:16 IST
vignesh-1200

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடிக்கு இடையே வயது வித்தியாசம் என்ன என்பது குறித்து நெட்டிசன்கள் முழுமூச்சாக தேடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் நாயகியாக நடித்த நாயன்தாரவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. 7 வருடங்கள் காதலித்த இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குனர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், அட்லீ, மோகன் ராஜா உள்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்ட நயன் விக்கி திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அந்த ஆண்டு நயன்தாராதான் இணையத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக வலம் வந்தார்.

திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில் வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இதனிடையே திருமணம் முடிந்ததும் இவர்கள் பற்றி தகவல்களை நெட்டிசன்கள் பலரும் திருணத்தில் நயன்தாரா அணிந்திருந்த புடவையின் விலை, மற்றும் நகைகளின் விலை விபரம் மற்றும் திருமணத்திற்கு ஆன செலவு உள்ளிட்ட பல தகவல்களை தேடியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது நெட்டிசன்கள் பலரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் வயது வித்தியாசம் தொடர்பான தகவல்களை தேடி வருகின்றனர். இதில் நயன்தரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர் என்று தெரியவந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி பிறந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது 37 வயது ஆகிறது. 

1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பிறந்த நயன்தாராவுக்கு தற்போது 38 வயதாகிறது. இருவரும் அடுத்த மாதம் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாட உள்ள நிலையில், இவர்களின் திருமண வீடியோவ நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடாமல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vignesh Shivan #Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment