/indian-express-tamil/media/media_files/juh1e2y7XBzxPbohg5Dr.jpg)
நயன்தாரா - சஷிகாந்த்
அன்னப்பூரணி படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடித்து வரும் டெஸ்ட் படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்படிப்பை முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது படங்களில் பிஸியான நடித்து வருகிறார். இதில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் சரியாக வரவேற்பை பெறாத நிலையில், அடுத்தாக அவர் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நயன்தாரா தனது படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ததனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனரும் தயாரிப்பாளருமான சஷிகாந்த், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், குமுதா கேரக்டருக்கு மேலும் ஒரு மடங்கு உயிர் கொடுத்தற்கு நன்றி. உங்கள் நடிப்பின் மூலம் அவளை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது இதை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ள இனியும் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
படத்தில் குமுதா கேரக்டரில் நடிக்கும், நயன்தாரா, "குமுதா, எனக்கு நீங்கள் மிகவும் தேவைப்படும்போது என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி !! இப்போது நான் அதை இழக்கிறேன். நன்றி சஷிகாந்த், மாதவன், சித்தார்த், குமுதாவின் மிகப்பெரிய பலமாக இருப்பதற்கு, உத்வேகமாக இருப்பதற்கு நன்றி. அன்பின் உழைப்பைக் காண நீங்கள் அனைவரும் காத்திருக்க காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
#TEST …. And that’s a wrap for Kumudha!
— Sash (@sash041075) January 8, 2024
Thankyou #Nayan for giving it everything and bringing her to life. It has been an about pleasure seeing her through you. Can’t wait to share this, to the rest of the world ✨✨🧡#Nayanthara@ActorMadhavan
#Siddharth@chakdynpic.twitter.com/84DAtdEy2p
'டெஸ்ட்' படம்தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.மேலும் இது ஒரு சிறந்த பான்-இந்திய விளையாட்டு பற்றிய படமாக இருக்கும். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.