கமல்ஹாசனின் தேவர் மகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தம் பிரியசகி, திமிரு, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கடைசியாக லாரன்சின் ருத்ரன் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்திருந்த நீலிமா ராணி சின்னத்திரையில் பிரபமான நடிகையாக வலம் வருகிறார்.
1998-ம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நீலிமா மெட்டி ஒலி, கோலங்கள், கஸ்தூரி, அத்திப்பூக்கள், செல்லமே தென்றல், வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து வரும் நீலிமா ராணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
2008- முதல் 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் திருமணத்திற்கு பின்புதான் நடைபெற்றது. நான் வெளியே செல்லும்போது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச நினைப்பார்கள். அப்படி பேசுவார்கள் பாராட்டுவார்கள். அதே நேரத்தில் என்னை திட்டவும் செய்வார்கள். குறிப்பாக ஒருமுறை விமான நிலையத்தில் ஒரு பாட்டி என்னை கண்டபடி திட்டியது ஒரு மோசமான அனுபவம்.
என்னை தவறாக விமர்சிப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் மனநல மருத்துவமனைக்கு போக வேண்டியவர்கள். என்னுடைய 2-வது குழந்தை பிறந்தவுடன் நான் அதிக வெயிட் போட்டுவிட்டேன். அதை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கிறது. சிலபேர் என்னுடைய மார்பகங்கள் பற்றியெல்லம் கமெண்ட் செய்கிறார்கள்.
நான் என்குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல தோன்றும். இங்கு சொல்லி என்ன ஆக போகிறது என்று நினைத்து விட்டுவிடுவேன் என்று நீலிமா ராணி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“