scorecardresearch

முதல் திருமண நாள்… நடு ரோட்டில் கணவருக்கு லிப்லாக் : டார்லிங் நடிகை செம தில்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி

Aadhi Nikki
ஆதி – நிக்கி கல்ராணி

தனது கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடிய தமிழ் நடிகை ஒருவர், நடு ரோட்டில் லிப் கிஸ் கொடுத்த வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி, தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் யாகாவராயினும் நாகாக்க, மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆதியை காதலித்த நிக்கி கல்ராணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நிலையில், திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

இந்நிலையில், சமீபத்தில் ஆதி- நிக்கி கல்ராணி தம்பதி தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடிய நிலையில், பாரீசில் உள்ள ஈபிள் டவர் அருகில் கொண்டாட்டத்தை தொடங்கினர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருவரும் லிப் கிஸ் அடித்த வீடியோ காட்சியை நடிகை நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஆதி – நிக்கி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress nikki and aadhi celebrate first wedding day in paris