ரஜினிகாந்த் மனைவியாக நிரோஷா: லால் சலாம் லேட்டஸ்ட் அப்டேட்

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nirosha

நடிகை நிரோஷா

ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நிரோஷா தனது திரையுலக வாழ்க்கையில் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.

Advertisment

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படம் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்திற்காக ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் உலககோப்பை நாயகன் கபில்தேவ் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிகை நிரோஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ராஜவம்சம் என்ற படத்தில் நடித்திருந்த நடிகை நிரோஷா, 80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: