Advertisment

நடு ரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம் : நிவேதா பெத்துராஜ் வைரல் வீடியோ ; உண்மை என்ன?

போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நடிகை நிவேதா பெத்துராஜ் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகறது.

author-image
WebDesk
New Update
Nivetha Pethuraj

நடிகை நிவேதா பெத்துராஜ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் போலீசாருடன் வாக்குவதம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

2016-ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிவேதா தற்போது கடந்த 2023-ம் ஆண்டு தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான செப்பன சுந்தரி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையெ நடிகை ஹைதராபாத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நிவேதா பெத்துராஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் அவரது காரின் பூட்டை போலீசார் திறக்கும்படி கேட்டனர். நிவேதா பெத்துராஜ் பூட்டை திறக்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த மோதலை பதிவு செய்ததற்காக அவர் போலீசாருடன் சண்டையிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில் காணப்பட்ட போலீஸ் அதிகாரி சரியான சீருடையில் அணியாமல் இருப்பதால், வைரலான வீடியோ நடிகையின் விளம்பர ஸ்டண்ட் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், வைரலான வீடியோ குறித்து நிவேதா பெத்துராஜ் உண்மையை சொல்லும் வரை காத்திருக்க வேண்டும்.

நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஏ.எல்.விஜய் இயக்கிய தமிழ்-தெலுங்கு ஹாரர் த்ரில்லர் படமான 'பூ' படத்தில் நடித்திருந்தார். ரகுல் ப்ரீத் சிங், விஷ்வக் சென், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இது ஒரு பிரபலமான OTT தளத்தில் நேரடியாக திரையிடப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Nivetha Pethuraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment