Advertisment

அபியை இப்படி பார்த்ததே இல்லையே! பவித்ரா ஜனனி சிம்ப்ளி சூப்பர் க்ளிக்ஸ்

பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pavithra Janani

நடிகை பவித்ரா ஜனனி

விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment
publive-image

அதன்பிறகு விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.

publive-image

வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

மேலும் இந்த சீரியலில் வெற்றி அபி இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கும், தற்போது அவர்களுக்கு இடையே நடைபெற்று வரும் செல்லமான சண்டைகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

publive-image

அதேபோல் இந்த சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் வினோத் பாபு, பவித்ரா ஜனனியின் நடிப்பை பிரபல நடிகை அனுஷ்கா சர்மா பாராட்டியதாக இருவரும் மேடையில் தெரிவித்திருந்தனர்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

publive-image

அந்த வகையில் பவித்ரா ஜனனி சேலையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. ஹிட் சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் மட்டுமல்லாமல் அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் நல்ல வரவேற்பை பெற்ற வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Pavithra Janani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment