Advertisment

மும்பையில் புதிய வீடு... அட்லி வீட்டுக்கு அருகில் குடியேறிய பூஜா ஹெக்டே!

வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிசிகா பாய் கிசிகா ஜான் என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே தற்போது தேவா படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
pooja Hegde 23042024

நடிகை பூஜா ஹெக்டே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, அடுத்து ஷாகித் கபூருடன் இணைந்து தேவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை பூஜா ஹெக்டே குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை பூஜா தனக்கென ரூ45 கோ செலவில் புதிய வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஜீவா நடிப்பில் வெளியின முகமூடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே அடுத்து தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆனார். சமீபத்தில் வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிசிகா பாய் கிசிகா ஜான் என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே தற்போது தேவா படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவின் பிரதான இடத்தில் தனக்கென ரூ.45 கோடி மதிப்பிலான ஆடம்பரமான வீட்டை வாங்கியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடு இயக்குனர் அட்லியின் வீட்டுக்கு அருகில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் 'மெர்சல்', 'பிகில்' மற்றும் 'தெறி' போன்ற படங்களின் படங்களை இயக்கிய அட்லி, சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார்.

இந்த படம் ரூ1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்த நிலையில், இந்த படத்திற்கு பின் அட்லீ மும்பையில் குடியேறியுள்ளார். அட்லிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இந்தியில் தயாராகி வரும் பேபி ஜான் என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இந்த படம் அவரது இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற விஜயின் தெறி படத்தின் ரீமேக் ஆகும். இதனிடையே மும்பையில் அட்லி தனது குடும்பத்துடன் இருக்கும் அதே இடத்தில் பூஜா ஹெக்டேவும் குடியேறியுள்ளார்.

"பூஜா ஹெக்டே வீடு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. 4000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான குடியிருப்பு பரந்த கடல் காட்சிகளை பார்க்க முடியும் என்பது மட்டுமல்லாமல், மன அமைதியை தரும் ஒரு இடமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Atlee Pooja Hegde
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment