தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நடிகை பூர்ணா தற்போது தனது வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ஷிம்னா கசீம் என்ற பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சு போல் ஒரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.


அதனைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு ஸ்ரீமகாலட்சுமிஎன்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான பூர்ணா, 2008-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு, கொடிவீரன், விசித்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மலையாளம், தெலுங்கு தமிழ் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள பூர்ணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


இதனிடையே தற்போது பூர்ணாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பூர்ணாவின் நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்ச்யில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil