Actress Poorna Leave In Stage For Indecent Activities : டிவி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை தொட்ட ஒரு போட்டியாளரை சராமாரியாக திட்டிய நடிகை பூர்ணா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான பூர்ணா, படத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலயங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழில் கந்தக்கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், மணல்கயிறு, தகராறு, கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது படவாய்ப்பு குறைந்தால், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பூர்ணா, தெலுங்கில் பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீதேவி ட்ராமா கம்பெனி என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில பூர்ணா பேசும்போது போட்டியாளராக பங்கேற்ற இமானுவேல் என்பவர் நடிகை பூர்ணாவின் தோலில் கைவைத்து பேசியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பூர்ணா தோலில் இருந்து கையை தட்டிவிட்டு என்ன இதெல்லாம், எப்படி நீ எனனை தொடலாம் என்று கோபமாக பேசிவிட்டு மேடையை விட்டு வெளியேறியுள்ளார்.
தெலுங்கில் ஏற்கனவே தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பூர்ணா அந்நிகழ்ச்சியில் நன்றாக நடனமாடிய ஒரு நபருக்கு முத்தம் கொடுத்தது அப்போது வைரைலாக பரவியது. மேலும் அந்த நிகழ்வின்போது முத்தம் கொடுத்த நபரின் கன்னத்தை பூர்ணா கடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Oru judge panra velyaa ithu
— chettyrajubhai (@chettyrajubhai) September 17, 2021
Actress #Poorna Kissed And Bites Contesant Cheek pic.twitter.com/l3p3Nxb1XD
இதற்கு விளக்கம் கொடுத்த நடிகை பூர்ணா, நான் எப்போதும் என் அம்மா மற்றும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கன்னத்தை கடிப்பேன். எனக்கு பிடித்த குழந்தைகள் மற்றும் என் சகோதரி சகோதரன் வயதில் இருக்கும் குழந்தைகளின் கன்னங்களை கடிப்பேன். நிகழ்ச்சியில் நான் முத்தமிட்ட பையனை என் குழந்தையாகவே பார்க்கிறேன் என பதில் அளித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“