சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வந்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், அருண்விஜயுடன் இவர் நடித்த மாஃபியா, யானை உள்ளிட்ட படங்கள் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.
ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தனுஷூன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆண்டில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது டிமாண்டி காலனி 2, ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம், உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கமல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது காதலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில்,
இந்த பையன் இருக்கிறாரே இவர்தான் என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சிரிக்கிறோம், சண்டை இடுகிறோம், அழுகிறோம். அடிக்கடி மேக்கப்பும் செய்து கொள்கிறோம். அவர் சத்தமாகவும் நம்பிக்கையுடனும் பல தவறான பாடல் வரிகளை பாடிக்கொண்டிருக்கிறார். நாங்கள் இருவருமே A &Z வேறு வேறு தான். ஆனாலும் என்னை அவர் எப்போதுமே திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் வித்தியாசமாக இருந்தாலும் அவரோடு நான் அன்பாகவும் ஜாலியாகவும் இருக்கிறேன்.
அதுபோல அவரோடு தான் நான் நிம்மதியாக உணர்கிறேன். அவரும் என்னோடு இருக்கும்போது சந்தோசமாக இருக்கிறார். அவரோடு நான் அமைதியாக உட்கார்ந்து ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தை பார்த்து என்னுடைய மனதில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் பேச முடிகிறது. அதுவே எனக்கு போதும்... இந்த வாழ்க்கையை நான் ஆனந்தமாக கடக்க கோடி மடங்கு போதும்.. என்னுடைய ராஜ்வேல்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், இருவர் வானம் வேறொன்றாலும்... என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பிரியா பவானி சங்கரின் ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“