/tamil-ie/media/media_files/uploads/2023/06/Priya-bhavani-shankar.jpg)
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து மாஃபியா, மான்ஸ்டர், யானை உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2', ஹரி இயக்கத்தில் விஷாலின் 34வது படம், 'டிமான்டே காலனி 2' மற்றும் 'அரண்மனை 4' என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. நடித்துள்ள பொம்மை படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 16-ம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு விளம்பர நிகழ்வில் தொகுப்பாளர் பிரியாவிடம் சிறு வயதில் பொம்மைகளுடன் விளையாடுவீர்களா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்துள்ள அவர், "நான் சிறுவயதில் பொம்மைகளுடன் அதிகம் விளையாடியதில்லை. 18 வயதில் நான் காதலித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும், அப்போதிருந்து நான் என் காதலனிடம் (ராஜவேலிடம்) எதையாவது வாங்கி பணத்தை வீணாக்காதே என்று சொல்வேன். பெரும்பாலான பெண்கள் விரும்பும் டெட்டி பியர் நான் வாங்கிதே இல்லை. அதேபோல் பூக்கள் என் கைக்கு வருவதற்குள் அவை வாடிவிடும் என்பதால், எனக்கு பூக்களை வாங்க வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன்.
அதற்குப் பதிலாக, எங்கள் சந்திப்புகளின் போது சாப்பிடுவதற்கு அவர் எனக்கு வித்தியாசமான உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதில் ஆண் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், தங்களது கேர்ள் ப்ரண்ட் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.