Advertisment

மீண்டும் நெல்சனுடன் வெளிநாடு டூர் : பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் போடடோ வைரல்

தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது

author-image
WebDesk
New Update
Nelson Dileep1

நெல்சன் திலீப் குமார் - பிரியங்கா மோகன்

நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்டரி ஆன பிரியங்கா மோகன் அதன்பிறகு அவரின் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்ட நிலையில், தற்போது நெல்சனுடன் பிரியங்கா வெளிநாடு டூர் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஜெயிலர் படத்தின் மூலம் புகழின் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கிய டாக்டர் படத்தின் மூலம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரயங்கா அருள் மோகன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே டாக்டர் படத்திற்கு பின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வேறு எந்த படத்திலும் நடிக்காத நடிகை பிரியங்கா, நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புறவில் இருந்து வருகிறார்.

Nelson Dilee

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் காணப்பட்ட பிரியங்கா மோகன் அந்த படத்தின் வெளியீட்டுக்கு பின் தனது குடும்பத்தினருடன் நெல்சன் துபாய் சென்ற நிலையில், அவர்களுடன் பிரியங்காவும் சென்றிருந்தார். தற்போது ஜெயிலர் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கும் நெல்சன் தற்போது தனது குடும்பத்துடன் லண்டனில் நாட்களை கழித்து வருகிறார்.

ஏற்கனவே துபாய் சென்றபோது கவின் மற்றும் பிரியங்கா மோகன் நெல்சனுடன் சென்றிருந்த நிலையில், தற்போது  லண்டன் சென்றுள்ள நெல்சன் குடும்பத்தினருடன் பிரியங்கா மோகன் சென்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரியங்கா மோகன் நெல்சனின் மனைவி மோனிஷாவின் நெருங்கிய தோழியாகவே மாறிவிட்டார் எனக் கூறப்படும் நிலையில், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்டோரும் இந்த லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சனும், கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில் நடிகை பிரியங்கா மோகனும் விடுமுறையை குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment