சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
ரச்சிதா மகாலட்சுமி
பெங்களூரில் பிறந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. பட்டதாரியான அவர், மாடலிங்கும் செய்துகொண்டிருந்தார். கன்னட சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான மேக மந்தரன் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Advertisment
Advertisement
அதன்பிறகு 2011ல் விஜயஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
ரச்சிதா மகாலட்சுமி
பின்னர் விஜய்டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இதில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி இரண்டு சீசன்களிலும் இவரே நடித்தார்.
ரச்சிதா மகாலட்சுமி
இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
ரச்சிதா மகாலட்சுமி
ஒரு சில படங்களில் நடித்த பின் மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தொடர்கள், ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்தார்.
ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார். கலர்ஸ் தமிழில் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி
கலர்ஸ் தமிழின் அம்மன்-மாங்கல்ய சந்தோசம் சீரியல் மகா சங்கமத்தில் அம்மன் கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பிய அவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“