Advertisment

இடம் பெயரும் ராதிகா சரத்குமார்: இனி அப்போ அந்த டி.வி இல்லையா?

Tamil Serial Update : 90-களின் இறுதியில் சின்னத்திரையில் களமிறங்கிய ராதிகா சித்தி வாணி ராணி உள்ளிட்ட பல தொடங்களில் நடித்து சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

author-image
WebDesk
May 05, 2022 17:31 IST
இடம் பெயரும் ராதிகா சரத்குமார்: இனி அப்போ அந்த டி.வி இல்லையா?

80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகியாக இருந்தவர் ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்ஆர் ராதாவின் மகளான இவர், கடந்த 1978-ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து 90-களின் இறுதியில் சின்னத்திரையில் களமிறங்கிய ராதிகா சித்தி வாணி ராணி உள்ளிட்ட பல தொடங்களில் நடித்து சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சீரியல்களை தயாரித்திருந்தார்.  கடைசியாக சன் தொலைக்காட்சியில் சித்தி 2 தொடரை தயாரித்து நடித்து இருந்தார்.

நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ராதிகா திடீரென விலகினார். அப்போது தேர்தல் நேரம் என்பதால் ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பிரவேசம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பிறபு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராதிகா சீரியல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இதுவரை சன் தொலைக்காட்சிக்காக சீரியல் தயாரித்து வந்த ராதிகா தற்போது கலைஞர் தொலைக்காட்சிக்காக சீரியல் தயாரிப்பில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொன்னி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Tamil Serial News #Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment