80 மற்றும் 90 களில் தமிழ சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கேபோகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராதிகா, முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், சிவக்குமார், ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திரம் மற்றும் நாயகர்களின் அம்மாவாக பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 90 களின் இறுதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா, சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி, சித்தி 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தனது ரேடான் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இதில் சித்தி சீரியலுக்கு இன்றளவும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. சின்னத்திரையில் பஸியான நடித்து வந்தாலும், திரைப்படங்களிலும் ராதிகா கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது கணவருடன் இணைந்து கடைசியாக இவர் நடித்த வானம் கொட்டட்டும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடித்துக் கொண்டிருந்த சித்தி 2 சீரியலில் இருந்து விலகுலதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு சீரியல் ரசிர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து தனது கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக உள்ள ராதிகா தொடர்ந்து அரசியலில் ஈடுபட உள்ளதால் சீரியலில் இருந்து விலகுவதாக விளக்கம் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கட்ந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்காக பிரச்சாரமும் மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் ராதிகா தனது கணவருடன் இணைந்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிட்னஸ் சீக்ரட் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராதிகா சரத்குமாரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ராதிகா அடுத்த ஆக்ஷன் சீரியலுக்கு ரெடியாகிறாரா என்ற கமண்ட் செய்து வருகின்றனர்.
A Sunday morning, surrounded with good energy and what’s good for you and of course did not resist my Godiva❤️❤️❤️❤️ pic.twitter.com/EzwRykopwh
— Radikaa Sarathkumar (@realradikaa) May 24, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil