Advertisment

80'ஸ் ஹீரோயின்ஸ்; இப்பவும் பியூட்டீஸ்: கல்யாண வீட்டுல ஒண்ணு கூடிட்டாங்கய்யா!

திருமண விழா ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகை ராதிகா தான் நாயகியாக நடித்த காலத்தில் தனக்கு இணையாக முன்னணி நடிகைகள் போட்டோஸ் வெளியிட்டுள்ளார்

author-image
WebDesk
Jun 05, 2023 14:05 IST
New Update
80s Heroines

ராதிகா சரத்குமார் - சுஹாசினி மற்றும் நடிகைகள்

80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த சிலர் திருமண விழாவில் சந்தித்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா. தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுதுள்ள ராதிகா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி கன்னடா மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தென்னிந்திய மொழிப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் ராதிகா சரத்குமார் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது வெளியூர் சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது என பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட இலங்கை டூர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதனிடையே தற்போது திருமண விழா ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகை ராதிகா தான் நாயகியாக நடித்த காலத்தில் தனக்கு இணையாக முன்னணி நடிகைகளாக இருந்த நதியா, ஷோபனா, பூர்னிமா, சுஹாசினி, அருணா உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 80-ஸ் ஹீரோயின்ஸ் மீண்டும் இணைந்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த அம்பிரீஷ் மகன் அபிஷேக் அம்பிரீஷ் திருமணம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி கர்நாடகாவில் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ராதிகா உள்ளிட்ட் நடிகைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த திருமண விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது ராதிகா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment