New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Radhika-Sarathkumar.jpg)
ராதிகா சரத்குமார்
அதேபோல் 90-களில் இறுதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா சரத்குமார், சித்தி என்ற தொடரின் மூலம் இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
ராதிகா சரத்குமார்
80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார் தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் 90-களில் இறுதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா சரத்குமார், சித்தி என்ற தொடரின் மூலம் இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு அண்ணாமலை, வாணி ராணி என பல தொடர்களை தயாரித்து நடித்து வந்த ராதிகா தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறார்.
மேலும் தனது கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் ராதிகா சரத்குமார் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் தான் குடும்பத்துடனும், தனியாகவும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதில் பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வழக்கம்.
சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்காக இலங்கை சென்ற புகைப்படங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது வெளியில் சென்றுள்ள ராதிகா ஷாக்ஸ் மற்றும் டீசர்ட்டுள் கடல் பாலத்தில் இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், லைக்ஸ் வாரி குவித்து வருகிறது இந்த புகைகப்படம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.