மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா – விஷால் இடையே காரசாரணமான விவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராதிகா பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வெளியானது. இதில் இருக்கும் பல தகவல்கள் மலையாள சினிமாவை புரட்டி போட்டுள்ள நிலையில், முன்னணி நடிகர்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சில நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஹேமா கமிட்டியின் இந்த அறிக்கை மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில், நடிகர் விஷால் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியதும், இந்த கருத்துக்கு, நடிகை ராதிகா பதிலடி கொடுத்ததும், வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், விஷால் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என விமர்சனங்களும் எழுந்தது.
இதனிடையே நடிகை ராதிகா தற்போது, திரையுலகில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நடிகைகள், மௌனமாக இருப்பது தவறானது. அவர்களுக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வருவதால், மௌனத்தை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மலையாள சினிமா படப்பிடிப்பின்போது, ஆண் நடிகர்கள் செல்போன் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டபோது, கேரவனில் கேமரா இருக்கிறது. அந்த கேமராவில் இருந்து வரும் பெண்கள் உடை மாற்றும் காட்சியை பார்த்து தான் சிரிக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
அதன்பின்னர், கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கேமரா வைத்தால், செருப்பால் அடித்தேன் என்று எச்சரித்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு கேரவனில் நான் உடை மாற்றுவதில்லை. ஹோட்டலில் உடை மாற்றுவதை வழக்கமாகிக்கொண்டேன் என்று ராதிகா கூறியிருந்தார். ராதிகாவின் இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், கேரளாவில் இது தொடர்பான வரும் புகார்களை விசாரணை செய்யும் புலனாய்வு குழு இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராதிகா பேசியது குறித்து அவரிடமும் தொலைபேசியில்
தொடர்புகொண்டு விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் நடந்துகொண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். தவறு செய்பவர்களை கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் தட்டி கேட்பேன். கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் சொன்னேன். புகார் கொடுக்கவில்லை. இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை தவறாக உள்ளது.
திரைப்பட துறையில் முன்பு போல் இப்போது பாலியல் அத்துமீறல்கள் இல்லை. பாலியல் அத்துமீறல்கள் நடந்தாதாக என்னிட்டம் பல பெண்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.