scorecardresearch

வாழ்க்கையில் அவ்வளவு சோகமா? : தனிமையில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்

தமிழ் சினிமாவில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் ரைசா வில்சன்.

Biggboss Raiza Wilson
பிக்பாஸ் நடிகை ரைசா வில்சன்

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமான நடிகை ரைசா வில்சன் மன அழுத்தத்தில் இருப்பதாக அழுதுகொண்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் ரைசா வில்சன். அந்த படத்தில் வசுந்தராவின் உதவியாளராக நடித்திருந்த ரைசா தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சனுக்கு அடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் 2018-ம் ஆண்டு வெளியான பியர் பிரேமா காதல் என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்த ரைசா, தொடர்ந்து தனுஷூ ராசி நேயர்களே, வர்மா, எஃப்.ஐ.ஆர் பொய்கால் குதிரை, காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து இவரது நடிப்பில் கருங்காப்பியம் படம் வெளியாக உள்ளது.

மேலும், அட்லவ், தி சேஸ், அலிஸ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ரைசா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சோகமாக அழுகாட்சியுடன் ரைசா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் இந்த விஷயங்களை எல்லாம் கடந்து போவது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால் நாம் எப்போதும் தனியாக இருக்க மாட்டோம். எல்லா நேரத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தை கண்டுபிடித்துக்கொண்டே இருப்போம். அப்படி இருக்கும்போது கண்டிப்பாக நமக்கு சந்தோஷம் வந்து சேரும் என்று ரைசா பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress raiza wilson sad feelign photos viral on social