மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனுரக கரிக்கின் வெள்ளம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஜிஷா விஜயன்.
Advertisment
முதல் படத்திலேயே கேரளா அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற ராஜிஷா விஜயன், தொடர்ந்து ஜார்ஜ்டேன் பூரம், ஒரு சினிமாகாரன், ஸ்டெண்ட்அப், லவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 2020-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளத்தை போலவே தமிழிலும் ராஜிஷாவுக்கு முதல் படமான கர்ணன் வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து சூர்யாவுடன் ஜெய்பீம் படத்தில் நடித்த இவர், ராமாராவ் ஆன் டுட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
ரவிதேஜா நாயகனாக நடித்திருந்த இந்த படம் தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு தமிழில் கார்த்தியின் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் 3 தெலுங்கில் ஒன்று என பெரிய வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் ராஜிஷாவுக்கு தற்போது மலையாள சினிமா மட்டுமே கைகொடுத்து வருகிறது.
சமீபத்தில் லவ்ஃபுல் யுவர்ஸ் வீடே, பகலும் பாத்திரவும் ஆகிய படங்களை கொடுத்த ராஜிஷா தற்போது அமலா, கொள்ளா, மதுரம், மனோகரம், மோகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஜிஷா விஜயன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கர்ணன் படத்தில் நடித்தவரா இவர் என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil