Advertisment

வீடியோ : அங்க ஜக்கி வாசுதேவ்... இங்க கபில்தேவ்... பிரபலங்களுடன் கால்ஃப் விளையாடிய பிரபல நடிகை

தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை வெளியிட்டு வரும் ரகுல் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Jul 04, 2022 11:28 IST
வீடியோ : அங்க ஜக்கி வாசுதேவ்... இங்க கபில்தேவ்... பிரபலங்களுடன் கால்ஃப் விளையாடிய பிரபல நடிகை

தமிழில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக் மூலம் திரைத்துரையில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தமிழில் யுவன், தடையற தாக்க, என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் எந்த படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில், தனது கவனத்தை தெலுக்கு பக்கம் திருப்பினார்.

Advertisment

டோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாவு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை வெளியிட்டு வரும் ரகுல் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள ரகுல் ப்ரீத் சிங் அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோருடன் கால்ஃப் விளையாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரகுல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போதுவரை 2.78 லட்சம் லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rakul Preet Singh #Kapil Dev #Jaggi Vasudev
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment