Advertisment

90-களில் கனவுக்கன்னி... குழந்தைகளுடன் நடிகை ரம்பா... பர்த்டே க்ளிக்ஸ் வைரல்

ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ரம்பா.

author-image
WebDesk
Jun 10, 2023 17:49 IST
Ramba

நடிகை ரம்பா பர்த்டே க்ளிக்ஸ்

90 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ரம்பா தற்போது தனது குழந்தைகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரம்பா 1992-ம் ஆண்டு ஆ ஒக்கடே ஆகட்டு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர்

publive-image

தொடர்ந்து, உழவன் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர், கார்த்தியின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

publive-image

அதன்பிறகு ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ரம்பா.

publive-image

மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பேஜ்பூரி, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

publive-image

கடந்த 2010-ம் ஆண்டு இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட ரம்பா தற்போது வெளிநாட்டில செட்டில் ஆகிவிட்டார்.

publive-image

அவருக்கு லான்யா, சாஷா, ஷிவின் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சமூகவலைதளயங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்பா அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் ரம்பா தனது பிறந்த நாளை முன்னிட்டு தற்போது தனது 3 குழந்தைகளுடன் இருப்பது போன்று நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment