/indian-express-tamil/media/media_files/2025/09/16/ramj-2025-09-16-07-57-06.jpg)
சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை ஒரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து அடுத்த சில வருடங்களில் கேரக்டர் நடிகையாக மாறிவிட்டால், அந்த முன்னணி நடிகருக்கு அக்கா, அம்மா நடிகையாக நடிக்கும் வழக்கம் சினிமாவில் இருந்து வருகிறது. நடிகை சுஜாதா, லட்சுமி, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பல நடிகைகள் அவ்வாறு நடித்துள்ளனர். அந்த வரிசையில் ஒரு நடிகை, ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 4 நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், படையப்பா என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தில் வில்லியாக நடித்து இன்றுவரை அந்த கேரக்டரை பற்றி பேசும் அளவுக்கு வைத்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தெலுங்கில் பாகுபலி படத்தில் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற இவர் தான், ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 4 நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த குடும்பம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக நாகர்ஜூனாவின் குடும்பம் தான்.
நாகர்ஜூனாவின் அப்பா அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் நாகர்ஜூனாவின் கடைசி மகன் அக்கினேனி அகில் வரை, தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் ரம்யாக கிருஷ்ணன் நடித்துள்ளார். தமிழில் தொடங்கி பாலிவுட் வரை தனது நடிப்பால் மக்களின் மனதை கவர்ந்த ரம்யா கிருஷ்ணன், ஒரு சில படங்களில் நாயகியாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். கவுண்டமணிக்கு ஜோடியாக கூட ஒரு படத்தில் நடித்துள்ளர். ஆனால் நாயகியாக அவருக்கு வெற்றிகள் கிடைக்கவில்லை.
தற்போது படங்களில், துணை கேரக்டர்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ம் ஆண்டு தொடங்கி இதுவரை ஐந்து மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில், படையப்பா, படிக்காதவன், பஞ்சதந்திரம், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்,அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல், நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, ஹலோ பிரதர், அன்னமய்யா போன்ற படங்களில் நடித்துள்ளார்,
நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மாமியார் வேடத்திலும், பங்கர்ராஜு படத்தில் பாட்டி வேடத்திலும் நடித்தார். ஹலோ படத்தில் அகிலின் அம்மாவாக நடித்த ரம்யா கிருஷ்ணன் ஒரே குடும்பத்தில் 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்து சாதனை படைத்துள்ளார்,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.