Actress Ramya Krishnan LIfestory Update : தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்ட நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். திரைப்படம், சீரியல், ரியாலிட்டி ஷோ, வெப் தொடர் என பிஸியாக நடித்து வரும் ரம்பாய கிருஷ்ணன், 50 வயதை கடந்தாலம் இளம் மாறாத தமிழ் சினிமா நடிகைகளில் முன்னணியில் இருந்து வருகிறார்.
1970-ம் ஆண்டு சென்னையில் பிறந்த ரம்யா கிருஷ்ணன் தனது 14-வது வயதில் 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் அவரின் தம்பி மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திய உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் பெரிய ஹீரோக்ளுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத ரம்யா கிருஷ்ணனுக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த படம் படையப்பா தான். கடந்த 1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து புகழ்பெற்றார்.
அதன்பிறகு தொடந்து பல மொழி படங்களில் கவனம் செலுத்திய அவர், 2008-ம் ஆண்டு கலசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு தங்கம் வம்சம் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்த அவர், பிபி ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்றார். பிரபலமாக நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் தனது 33-வது வயதில், தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ரித்விக் என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது 17-வயதாகும் தனது மகனுடன் ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுகவலைதளங்களில் வைராகி வருகிறது. திருமணத்திற்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் பிரபாஸ்க்கு அம்மாவாக நடித்ததன் மூலம் அனைவராலும் ராஜமாதா என்று அழைக்கப்படுகிறார். தற்போது தமிழில் பார்ட்டி உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருவாரம் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil