Advertisment

யாருப்பா அந்த போட்டோகிராஃபர்... ரம்யா பாண்டியனை இப்படி மாத்திட்டாரே : வைரல் வீடியோ

ரம்யா பாண்டியன் ப்ளேபாய் இதழ் போட்டோகிராஃபரை வைத்து வித்தியாசமான முறையில் போட்டோஷூட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ramya pandian

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக வலம் வரும் ரம்யா பாண்டியன் தற்போது வித்தியாசமாக முறையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சினிமா சின்னத்திரை யூடியூப் என பிரபலமாக இருக்கும் பலரும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. சிலர் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வெளியிடுவார்கள். அதே சமயம் சிலர் பாரம்பரிய உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியீடுவார்கள்.

ramya pandian3

ரம்யா பாண்டியன்

இதில் குறிப்பிட்ட சிலர் வித்தியாசமான முறையில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் கவனம் ஈர்த்து வருவது அவ்வப்போது நிகழ்வு. அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் ப்ளேபாய் இதழ் போட்டோகிராஃபரை வைத்து வித்தியாசமான முறையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ramya pandian2

ரம்யா பாண்டியன்

மாடல்களை க்ளாமராக போட்டோஷூட் செய்வதில் பெயர் பெற்ற பிளேபாய் போட்டோகிராபர் எல்.ராமச்சந்திரன் என்பவர் ரம்யா பாண்டியனை வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுத்துள்ளார். இதுவரை க்ளாமர் மற்றும் ரிச்சான சிட்டி லுக்கில் மட்டுமே போட்டோஷூட் வெளியிட்டு வந்த ரம்யா பாண்யன் தற்போது வித்தியாசமான முறையில், கிராமத்து பெண் கேட்டப்புக்கு மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுவரை இருந்த ரம்யா பாண்டியனை இந்த போட்டோகிராஃபர் வேறு லெவலுக்கு மாறியுள்ளார் என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட யாஷிகா ஆனந்த்தை இவர் போட்டோஷூட் எடுத்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Ramya Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment