யோகா மாஸ்டருடன் காதல்: ரிஷிகேஷில் திருமணம்; காதலரை கரம் பிடித்த ரம்யா பாண்டியன்!

ரம்யா பாண்டியனுக்கும் லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றது

ரம்யா பாண்டியனுக்கும் லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றது

author-image
WebDesk
New Update
Ramya Pandian Yoga

Ramya Pandian - Lovel Dhawan: சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்த நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலர் லவ்ல் தவானை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் வட இந்தியாவின் ரிஷிகேஷில் நடைபெற்றுள்ளது.

Advertisment

தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஜோக்கர் என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்த இவர், அடுத்து சமுத்தரக்கனியுடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே ரம்யா பாண்டியனுக்கு நல்ல பாராட்டுக்களை பெற்று தந்தது.

சூர்யா தயாரிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நன்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் முகிலன் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பிக்பாஸ் சீசன் 4 பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவரது காதலர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி பாயும் கரையில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ரம்யா பாண்டியனின் உறவினர் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் அவரது குடுமத்பத்தினர் இந்த திருமணத்தை நடத்தினார். அழகான சிவப்பு பட்டு புடவையில் ரம்யா பாண்டியனும், ஒரு வெள்ளை நிற பட்டு வேட்டி மற்றும் சட்டையில் லவ்ல் தவானும் திருமணத்திற்கு வந்திருந்தார். ஆற்றின் கரையில் சிறிய மேடை அமைக்கப்பட்டு தமிழ் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் நடிகர் அசோக் செல்வன், அவரது நடிகர் அசோக் செல்வன், அவரது மனைவி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன், ரம்யா பாண்டியனின் உறவினர் சகோதரியும் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த ஜோடி நவம்பர் 15, 2024 அன்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ramya Pandian Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: