இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சுவாமி நித்தியாந்தா நாட்டை விட்டு வெளியேறி ஒரு தனி தீவில் தஞ்சடைந்த நிலையில், அந்த தீவுக்கு கைலாசா என்று பெயர் சூட்டி தனி ஆட்சி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது இந்த நாட்டின் பிதரமராக நடிகை ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
1992-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சிதா. தொடர்ந்து வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, ஜெய்ஹிந்த், ராவணன் வில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்தள்ளார். கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு ராவணன் படத்தில் நடித்த ரஞ்சிதா அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
சினிமாவில் இருந்து விலகியதால் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ரஞ்சிதா, நித்தியாநந்தாவின் சிஷ்யையாக மாறினார். ஆனால் நித்தியாநந்தா மீது அடுக்கடுக்கான பல புகார்கள் குவிந்த நிலையில், அவர் இந்தியாவில் இருந்து தப்பி சென்றுவிட்டார். அவருடனே நடிகை ரஞ்சிதாவும் நாட்டை விட்டு சென்றுவிட்டார். நாட்டை விட்டு சென்ற நித்தியாநந்தா தனி தீவில் தஞ்சடைந்துள்ளதாகவும் அந்த தீவிற்கு கைலாசா என்று பெயரிட்டு ஆட்சி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே நித்தியாந்நதாவின் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல வேலை தேடும் தளமான லிங்க்டு இன் தளத்தில் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் பதிவிடப்பட்டு கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கைலாசாவின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை என்றும், தயவு செய்து உங்கள் நாட்டின் ஜனாதிபதி யார் என்று சொல்லிவிடுங்கள் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நடிகை ரஞ்சிதா தற்போது நித்தியாந்தாவின் அடுத்த இடத்தில் உள்ளதாகவும், டெக்னிக்கல் தொடர்பான நடவடிக்கைகள் அவர் மூலம் தான் நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“