scorecardresearch

காசுக்காக இப்படி மாறிட்டீங்களே ராஷ்மிகா… விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை

தற்போது ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Rashmika Mandana
ராஷ்மிகா மந்தனா

இந்தியாவின் நெஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளில் முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி தற்போது தமிழ் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகா பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக இருப்பதால் அவருக்கு விளம்பரங்களில் நடிக்கவும் அழைப்பு வருகிறது.

தற்போது ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். இதில் புஷ்பா 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் இந்தியில் சமீபத்தில் வெளியான மிஷன் மஜ்னு படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா தற்போது ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும் தன்னை தேடி வரும் விளம்பரங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இதில் அகோடா விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராஷ்மிகா நடித்த மெக் டொனால்ட்ஸ் விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் பிரைடு சிக்கன் ஃபர்கரை அறிமுகம் செய்தது. இதனை விளம்பரப்படுத்தும் நோக்கில் முன்னணி நடிகையாக ராஷ்மிகாவை அனுகிய போது அவரும் விளம்பரத்தில் நடிக்க சம்மதித்து நடித்துள்ளார். இந்த விளம்பரம் வெளியானபோது ராஷ்மிகாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா தான் பங்கேற்ற பேட்டிகளில் தான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்போது மெக் டொனால்ட்ஸ் பிரைடு சிக்கன் ஃபர்கர் விளம்பரத்தில் எப்படி நடித்தார், காசுக்காக ராஷ்மிகா இப்படி மாறிவிட்டாரா என்றும், காசுக்காக இப்படி வாய் கூசாமால் பொய் சொல்ல எப்படி முடிகிறது என்று கேட்டு நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress rashmika mandana fried chicken ad troll netizens