வாரிசு படத்தில் தனக்கு ஸ்கோப் இல்லை என்று தெரிந்தே படத்தில் நடித்திருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான படம் வாரிசு. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வாரிசு திரைப்படம் தற்போதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திரந்த இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக இருந்தாலும் ராஷ்மிகாவுக்கு 2 பாடல்களை தவிர வாரிசு படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.
இ.தனிடையே சமீபத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தில் இரண்டு பாடல்களைத் தவிர, தனக்கு குறிப்பிடத்தக்க கேரக்டர் இல்லை என்பதை தெரிந்துகொண்டுதான் படத்தின் நடித்தேன். இது உரு உணர்வுப்பூர்வமான தேர்வு என்று கூறியுள்ளார்.
ஃபிலிம் கம்பேனியனுக்கு அளித்த பேட்டியில், தளபதி விஜய் படத்தில் ‘குறிப்பிடத்தக் கேரக்டர் இல்லாமல் நடித்ததற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா கூறுகையில், “ ஒரு படத்தில் நடிப்பது எனது சொந்த விருப்பம் என்று நினைக்கிறேன், எனக்கு இரண்டு பாடல்கள் இருப்பதாக எனக்குத் தெரியும், அந்த இரண்டு பாடல்களிலும் சரியாக கவனம் ஈர்க்க வேண்டியிருந்தது. இது உண்மையில் ஒரு காமெடியாக இருந்தது.
இது குறித்து நான் விஜய் சாரிடம் சென்று ‘இரண்டு பாடல்களைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை’ என்று கூறுவது வழக்கம். இது மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு. நான் விஜய்யுடன் பணியாற்ற விரும்பியதால் படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்.ஏனென்றால் எனக்கு விஜய் மிகவும் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை, ஒரு நடிகராக, செட்டிற்குச் சென்று உடன் பணிபுரியும் நபர்களிடமிருந்து சிறிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதாமே ஆகிய பாடல்களில் ராஷ்மிகா சிறப்பாக நடனமாடியிருந்தார். மேலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படங்களை மட்டும் செய்ய விரும்பவில்லை என்றும், என்னிடம் எதுவும் இல்லாவிட்டாலும் வாரிசு படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். ஒரு நடிகனாக நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய விரும்புகிறேன்.
கமர்ஷியல் என்டர்டெய்னர்களில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். நான் அதில் நன்றாக இருக்கிறேன், மிஷன் மஜ்னு தற்போது நெட்ஃபிளிக்சில் (Netflix) வெளியாக உள்ளது. வாரிசு தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக ராஷ்மிகா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“