Advertisment

அது நடக்காம இருந்திருந்தா தனுஷ் என் புருஷன்: பிரபல நடிகை ஓபன் டாக்

வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக உள்ளிட்ட தொடர்களின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ரேகா நாயர்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rekha1

நடிகை ரேகா நாயர்

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர் நடிகர் தனுஷ் மீதான தனது காதலை வெளிப்படுத்தியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக உள்ளிட்ட தொடர்களின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நிர்வாணமாக நடித்து பலருக்கு அதிர்ச்சியளித்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால் கோபமான ரேகா நாயர், திருவான்மையூர் பீச்சுக்கு வாங்கிங் வந்த பயில்வானை நடு ரோட்டில் வைத்து தன்னை பற்றி அவதூராக பேசியது குறித்து கேட்டு கடுமையாக வாக்குவாதம் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவில் ரேகா நாயர் பயில்வானை அடிக்க பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பபரபரப்புக்கு இடையே பல படங்களில் கமிட் ஆகி வரும் ரேகா நாயர், எப்போதுமே தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனது மீதான தனது காதலை வெளிப்படுத்தியுளள்ள நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் பேசிய ரேகா நாயர், தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் தான். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷை திருமணம் செய்திருப்பேன். அந்த அளவுக்கு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட தனுஷை சந்திக்குமு் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.

இதே போன்று பவரும் அவரிடம் சொல்லியிருக்க வாய்ப்புள்ளதால், அதனை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம். ஆனால் நான் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர மற்றவர்களுக்கு தெரியாது. அந்த காதலை மனதிற்குள்ளே வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment