பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ஜீ தமிழின் சீதாராமன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர், தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள் குறித்து பேசியுள்ளார்.
Advertisment
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக பிரசாத் பசுபுலேட்டியின் மகளாக ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த இவர், விலங்கு என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
சின்னத்திரையில், வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்த ரேஷ்மா பசுபுலேட்டி, பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்றிருந்தார். அதேபோல் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கேரக்டர் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. சினிமாவில் க்ளாமராக நடித்து வரும் ரேஷ்மா, விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற கோபியை திருமணம் செய்துகொண்ட ராதிகா கேரக்டரில் ரேஷ்மா சிறப்பாக நடித்து அசத்தி வருகிறார். இவரின் கேரக்டர் மாற்றம் அவ்வப்போது இவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியை எழுப்புகிறது. பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் ஜீ தமிழின் சீதாராமன் சீரியலிலும் ரேஷ்மா மகா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
Advertisment
Advertisement
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ரேஷ்மா தனது கவலைகள் குறித்து பேசியுள்ளார். நான் அமெரிக்காவில் இருந்தேன். என் கணவர் பாக்சர் என்பதால் அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். நான் நான்கரை மாதங்கள் கர்ப்பினியாக இருந்தபோது, அவர் என்னை அடித்துவிட்டதால் குழந்தை வெளியில் வந்துவிட்டது.
இதை பார்த்த என் கணவர் ஓடிவிட்டார். நான் கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். அதன்பிறகு 9 மாதங்கள் அவன் இன்குபெட்டரில் இருந்தான். அவனுக்காக நான் பார்க்காத வைத்தியம் இல்லை. செய்யாத செலவுகள் இல்லை. அதை சமாளிக்க நான் என் பெற்றோருடன் வந்து தங்கிவிட்டேன். ராகுல் பிறப்பதற்கு முன்பு எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதன் காரணமாக ராகுலை காப்பாற்ற வேண்டும் என்று போராடினேன்.
என் முதல் குழந்தையை அனைவரும் மறந்துவிட்டார்கள். ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. வாழ்க்கையில் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் பின்னால் நிச்சயம் ஒரு சோகம் இருக்கும். என் வாழ்க்கையின் பின்னால் ஒரு சோகம் இருக்கிறது. ஆனால் வெளியில் பார்ப்பவர்களுக்கு அது தெரியாது அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும் என்று வருத்தமாக பேசியுள்ளார். மிர்ச்சி தமிழ் என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“