திருமணமாகி உடனே தாயாக நினைத்தேன்; ஆனா 3 மாதத்தில் டைவர்ஸ்னு சொல்லிட்டாங்க: நடிகை ரேஷ்மி மேனன் ஷாக்!
எனக்கு சிறு வயதில் இருந்தே, 25 வயதில் திருமணமாகி செட்டில் ஆகிவிட வேண்டும். அம்மா ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. அதன்படி திருமணம் செய்துகொண்டு உடனடியாக கர்ப்பம் ஆகிவிட்டேன்.
எனக்கு சிறு வயதில் இருந்தே, 25 வயதில் திருமணமாகி செட்டில் ஆகிவிட வேண்டும். அம்மா ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. அதன்படி திருமணம் செய்துகொண்டு உடனடியாக கர்ப்பம் ஆகிவிட்டேன்.
திருமணம் ஆகி உடனே கர்ப்பம் ஆகிவிட்டேன். ஆனாலும் 3 மாதத்தில் டைவர்ஸ் ஆகிவிட்டதாக வதந்திகளை கிளப்பிவிட்டார்கள் என்று நடிகர் பாபி சிம்ஹா மனைவி ரேஷ்மி மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisment
கடந்த 2002-ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரேஷ்மி மேனன். தொடர்ந்து ஜெயம் படத்தில் இளம் வளது சுஜாதா கேரக்டரில் நடித்த இவர், அடுத:து செல்லமே படத்தில் இளம் வயது மைதிலி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் 2004-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு 6 வருட இடைவெளிக்கு பிறகு, 2010-ம் ஆண்டு வெளியான இனிது இனிது படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, தேனீர் விடுதி, பர்மா, மாயா, கிருமி, உறுமீன், பயமாக இருக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார், இதில் உறுமீன் படத்தில் நடித்தபோது நடிகர் பாபி சிம்ஹாவுடன் காதலில் விழுந்த ரேஷ்மி மேனன், கடந்த 2016-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய ரேஷ்மி, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ப்ரேவோகே டி.வி. என்ற யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் வருவதற்கான எண்ணம் எனக்கு இருந்ததே இல்லை. எதேர்ச்சையாகத்தான் வாய்ப்பு கிடைத்தது. செல்லமே படத்திற்கு பிறகு, இடைவெளியில் கல்லூரி படத்து வந்தேன். அப்போது இனிது இனிது படத்திற்கு ஆடிஷன் நடப்பதாக என் ப்ரண்டு சொன்னார். அதற்காக போனோம் அப்படியோ செலக்ட் ஆகிட்டோம். கல்லூரி போகும்போதே அந்த படத்தில் நடித்து முடித்தேன். அதன்பிறகு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது,
Advertisment
Advertisements
எனக்கு சிறு வயதில் இருந்தே, 25 வயதில் திருமணமாகி செட்டில் ஆகிவிட வேண்டும். அம்மா ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. அதன்படி திருமணம் செய்துகொண்டு உடனடியாக கர்ப்பம் ஆகிவிட்டேன். அதன்பிறகு, குழந்தைகள் வளர்ப்பு, வீட்டுப்பணி என அப்படியே இருந்துவிட்டேன். இதுதான் நான் விரும்பிய வாழ்க்கை. அதேபோல் குழந்தைகள் நான் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அதனால் இத்தனை ஆண்டுகள் நடிக்கவில்லை. இப்போது அவர்கள் தனியாக இருக்க பழகிவிட்டார்கள். அதனால் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கிறேன்.
அம்மா, அக்கா என்று இல்லாமல் முக்கியமான கேரக்ராக இருந்தால் நடிக்கலாம் என்று நினைக்கிறேன். திருமணத்திற்கு பிறகு, நடிக்க வேண்டாம் என்று பாபி சொல்லவில்லை. நான்தான் நடிக்கவில்லை. அதேபோல், திருமணமாகி 3 மாதத்தில் டைவர்ஸ் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும், அதற்காக நாங்கள் 10 ஆயிரம் முறை டைவர்ஸ் பண்ணியிருக்கணும் என்று ரேஷ்மி மேனன் கூறியுள்ளார்.