scorecardresearch

மீனா நடிச்சிருக்க வேண்டிய படம் அது… தட்டிப் பறித்தாரா ரேவதி?

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் நடிகை ரேவதி

Actress Revithai
நடிகை ரேவதி

கமல்ஹாசனுடன் தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனாதான் என்றும் அதன்பிறகு அந்த கேரக்டரில் ரேவதி கமிட் ஆகி நடித்தாக தகவல் வெளியாக நிலையில், இது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்த பெருமைக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர் என சினிமாவில் பல துறைகளில் கைதேர்ந்தவரான கமல்ஹாசன் நடிகர் சிவாஜிக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பும் சரியான நடிகர் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

அதேபோல் பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ரஜினிகாந்துடன் கை கொடுக்கும் கை, கமல்ஹாசனுடன் கைதியின் டைரி, புன்னகை மன்னன், விஜயகாந்துடன் சத்ரியன் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

கமல்ஹாசனுடன் ரேவதி இணைந்து நடித்த முதல்படம் ஒரு கைதியின் டைரி. அதன்பிறகு புன்னகை மன்னன் படத்தில் நடித்த இவர், 1992-ம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ரேவதியின் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார்.

ஆனாலும் இந்த படத்தில் ரேவதி நடித்திருந்த பஞ்சவர்ணம் கேரக்டரில் முதிலல் நடிக்க இருந்தவர் நடிகை மீனா. அவரிடம் இருந்து இந்த வாய்ப்பை ரேவதி பறித்துக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தான் அப்படியெல்லாம் யாருடைய வாய்ப்பையும் பறிக்கவில்லை. தேவர் மகன் வாய்ப்பு எனக்கு தானாக அமைந்தது என்று நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு பத்தில் நடித்தபோது இயக்குனர் பரதன் (தேவர் மகன் இயக்குனர்) என்னை சந்தித்து மிகவும் அவசரம் நாளை மறுநாள் என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் ப்ரியதர்ஷன் சாரிடம் ஒருநாள் லீவு வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது டிடிபியில் டைப் செய்த தேவர் மகன் ஸ்கிரிப் பேப்பரை என்னிடம் கொடுத்தார். எனக்கு ஒரு ஆச்சரியம். அப்போதே அந்த ஸ்கரிப்பை படித்தேன். கதை கமல்ஹாசன் சார் எழுதியது. 3 மணி நேரம் படத்ததில் நான் கதையோடு ஒன்றிவிட்டேன்.

ஆனால் பஞ்சவர்ணம் யார் எப்படி இருப்பார் என்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அதனால் நான் பரதன் சாரிடம் சென்று கேட்டபோது அவர் இது குறித்து விளக்கம் அளித்தார். ஆனால் அடுத்த நாளே படப்பிடிப்பு தொடங்கியது. முதல் சீன் வேப்ப எண்ணெய் தலையில் தடவிய சீன் தான். அதன்பிறகு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress revathi said about kamal haasan devarmagan