தாஜ்மஹாலில் காதலர் தினம் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: புகைப்படங்கள் வைரல்

விஜய் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா தமிழ் செல்வி, தனது காதல் கணவருடன் காதலர் தினத்தை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா தமிழ் செல்வி, தனது காதல் கணவருடன் காதலர் தினத்தை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil actress Ritika celebrated Valentines Day at the Taj Mahal

நடிகை ரித்திகா தமிழ் செல்வி காதலர் தின கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

taj-mahal | tamil-serial-news | விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா தமிழ் செல்வி.
இவர் சிவா மனசில சக்தி, சன்டிவியின் சாக்லேட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். எனினும் இவருக்கு பெரிய திருப்புமுனையை பாக்கியலட்சுமி தொடர் ஏற்படுத்திக் கொடுத்தது.

Advertisment

இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் ஏற்பட்டது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களம் கண்டு, பட்டித் தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வினு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில், 2024 காதலர் தினத்தை தாஜ்மஹாலில் தனது காதல் கணவருடன் கொண்டாடியுள்ளார்.
இந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைதனங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Taj Mahal Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: