Advertisment

காஸ்ட்யூம்ஸ் நல்லா இல்லையா? ரோஷ்னி ஹரிப்பிரியன் வைரல் க்ளிக்ஸ்

மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
Roshini

ரோஷினி ஹரிப்பிரியன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

பாரதி கண்ணம்மா முதல் சீசன் மூலம் அதிகமான ரசிகர்களை சம்பாதித்த நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

publive-image

கல்லூரி முடிக்கும் வரையில் தனக்குள் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் தவித்த இவர், எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதியுள்ளார்.

publive-image

அதிகம் பேசவும் மாட்டேன். வாய் திறந்து சிரிக்க மாட்டேன். இப்படி என்னைப் பற்றி நானே வெகுநாட்களாகத் தாழ்த்திக்கொண்டிருந்தேன். கல்லூரி முடித்தபிறகுதான் எதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.

publive-image

சுய தொழில் செய்யலாம் என, நானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

publive-image

அதன்பிறகு மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

publive-image

எபிசோடு செல்ல செல்ல கண்ணம்மா என்ற கேரக்டர் பெயரே இவருக்கு மாற்று பெயராக அமைந்துவிட்டது. தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகினார்.

publive-image

அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஷ்னி தற்போது ஆல்பம் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்து வருகிறார். இது தொடர்பான ப்ரமோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment