Advertisment

சோனாவுக்கு பதிலான சாதனா... ஜீ தமிழ் சீரியலின் முக்கிய அப்டேட்

சோனா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் சோனா நடித்து வந்த கேரக்டருக்கு வேறு நடிகையை தேடும் நிலை உருவானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sona Sathana

நடிகை சோனா - சாதனா

ஜீ தமிழின் மாரி சீரியலில் இருந்து நடிகை சோனா விலகியதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சாதனா அந்த கேரக்டர் மூலம் சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுக்க உள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில், முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் மாரி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை சோனா, அவருக்கு மருமகளாக நடித்து வந்த நடிகை ஷப்னாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமாக நடிகை சோனா தான் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். சேனல் தரப்பில் அவரை சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சோனா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் சோனா நடித்து வந்த கேரக்டருக்கு வேறு நடிகையை தேடும் நிலை உருவானது. இதில் தற்போது சோனாவுக்கு பதிலாக மாரி சீரியலில் நடிகை சாதனா நடிக்க உள்ளார்.

சன்டிவியின் தென்றல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சாதனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மாரி சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுக்க உள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜீ குடுமப விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த வில்லி நடிகைகான விருது சோனாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ்கான விரு நடிகை ஷப்னாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சாதனா சின்னத்திரையில், பெண் தென்றல், வள்ளி, கல்யாண பரிசு, கேளடி கண்மணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் டிவியின் அன்புடன் குஷி தொடரில் நடித்த சாதனா தற்போது மாரி சீரியல் மூலம் ரீ-என்டரி ஆகியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment