scorecardresearch

துணிந்து நில் எபிசோட்டில் பிக்பாஸ் நடிகை : சன் டி.வி சீரியல் ஸ்பெஷல்

சமீபத்தில் விஜய்டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியல்களில் மகா சங்கமம் ஒளிபரப்பானது.

சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதை தக்கவைத்துக்கொள்ள டி.வி சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியலையும் களமிறக்கி வருகின்றன. ஒரு சில சேனல்களில் காலை தொடங்கி நள்ளிரவு வரை பல சீரியல்கள் அரங்கேறி வருகின்றனஃ

இதனால் டிவி சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடம் பிடிப்பது என்ற கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக இரண்டு சீரியல்களை இணைந்து மகாசங்கமம், வெள்ளித்திரை நடிகையின் ஸ்பெஷல் எண்ட்ரி என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சன்டிவியில் புதிய முயற்சி ஒன்று அரங்கேற உள்ளது.

சமீபத்தில் விஜய்டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியல்களில் மகா சங்கமம் ஒளிபரப்பானது. இந்த எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சன்டிவி சீரியிலில் வெள்ளித்திரை நடிகை ஒருவரை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும வாரங்களில் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் துணிந்து நில் என்ற ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த எபிசோட்டில் கெஸ்ட் ரோலில் நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையின் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ப்ரமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார், சுஜா வருணி,உள்ளிட்ட பிரபலங்கள் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்ததை தொடர்ந்து இன்ஸ்டாகிராமின் கவர்ச்சி கன்னி சாக்ஷி அகர்வாலும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress sakshi agarwal entry in suntv serial special episode