Advertisment

சமந்தா வீட்டுக் கல்யாணம்; ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் செம்ம ஹேப்பி; திருமண பரிசு என்ன?

சமந்தா தனது அண்ணன் திருமண புகைப்படங்களை தனது சமூகவலைதள பகத்தில் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantrha Mj

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் அண்ணன் டேவிட் திருமணம் ஜெனிவாவில் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்காக, சமந்தா என்ன பரிசு கொடுத்தார் என்பது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான சமந்தா, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமாக யா மாயா சேசாவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பானா காத்தாடி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த சமந்தா, விஜய், விக்ரம், சூர்யா, மகேஷ்பாபு உள்ளி்ட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடிதிருந்த சமந்தா, தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார்.

நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, ஒரு கட்டத்தில், நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், தொடர்ந்து நடிப்பில் மூழுமூச்சாக களமிறங்கி நடித்து வந்த நிலையில், இடையில், அரியவகை தோல் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே சமந்தாவின் அண்ணன் டேவிட் திருமணம், ஜெனிவா உள்ள ஏரியில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் தனது பெற்றோருடன் சமந்தா கலந்துகொண்டார். ஜெனிவா ஏரியின் அழகிய பின்னணியில், கையில் பூங்கொத்துடன், பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்ள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் சமந்தா ஒற்றை பூங்கொத்துடன் திருப்பி நிற்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இதுதான் அண்ணனுக்கு திருமண பரிசா என்று கேட்டு வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Samantha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment