கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்னைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்திருந்தார்.
2/7
அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
3/7
ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நான் ஈ படம் சமந்தாவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு ஜீவாவுடன் நீதானே என் பொன் வசந்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
Advertisment
4/7
அஞ்சான், கத்தி, மெர்சல், தங்கமகன், 24, இரும்புத்திரை, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் தமிழில் முன்னணி நடிகர்களுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார்.
5/7
சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்த சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு காத்து வாகுல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.
6/7
அதன்பிறகு நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளை தேடி நடித்த சமந்தாவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், சமீபத்தில் வெளியான குஷி படத்தில் விஜய் தேவர கொண்டாவுடன் நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
7/7
சமீப காலமாக தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது சென்னை ஸ்டோரீஸ் என்ற அமெரிக்க படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.