Advertisment

தளபதி 69 படம்... மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், அடுத்து ஒன்று அல்லது 2 படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Samantha

நடிகை சமந்தா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் மைக் மோகன் வில்லனாக நடித்து வரும் இந்த படத்தில் பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், அடுத்து ஒன்று அல்லது 2 படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்பட்டு வருவதால், கோட்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம், சங்காராந்தி பண்டிகையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனாலும் அவரது படங்களில் நடிக்க நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே திரிவிக்ரம் – விஜய் இணையும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க உள்ளார் என்றுநு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட 3 படங்களில் விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். இந்த 3 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இருவரும் இணையும் 4-வது படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் விஜய் தனது 69-வது படத்தின் இயக்குனராக எச்.வினோத் – திரிவிக்ரம் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்வது என்று ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu Thalapathy Vijay Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment