/tamil-ie/media/media_files/uploads/2023/07/ie-cropped-Samantha-Ruth-4-1.jpg)
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கிரையோதெரபி எடுப்பது போன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து நடிகை சமந்தா சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில், கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக மையோசிடிஸ் என்றும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, இதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் புதிய படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சமந்தா, அமெரிக்காவில் சில மாதம் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/vWCP3RsmvkWmytg3OsjK.jpg)
அந்த வகையில், தனது துணி பிஸினஸ், தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, கிரையோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் தான் தற்போது மையோசிடிஸ் நோயில் இருந்து குணமாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் நீராவி குளியல் தொடர்பான புகைப்படம் இணயைத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us