/indian-express-tamil/media/media_files/CYHxCm5Jaa1Wa4I6Cnb9.jpg)
நடிகை சமந்தா
/indian-express-tamil/media/media_files/samantha5.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. விஜய், சூர்யா விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்.
/indian-express-tamil/media/media_files/samantha7.jpg)
மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர் அதர்வா நாயகனாக அறிமுகமான பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
/indian-express-tamil/media/media_files/samantha2.jpg)
அதன்பிறகு கத்தி படத்தில் விஜய், அஞ்சான் படத்தில் சூர்யா, 10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா, தமிழில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படததில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/samantha3.jpg)
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்தார்.
/indian-express-tamil/media/media_files/samantha8.jpg)
திருமண முறிவுக்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, இடையில், மயோசிடிஸ் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகினார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/samantha6.jpg)
தி பேமிலி மேன் 2 வெப் சிரீஸ் மூலம் இந்தியில் அறிமுகமான சமந்தா தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/samantha9.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தனது ஃபிட்னஸ் பயிற்சியாளருடன் இணைந்து டேக் 20 என்ற பெயரில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/samantha4.jpg)
அந்த வகையில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, எந்த உணவுகளை தவிர்ப்பது என்பது குறித்து சமீபத்தில் பேசிய சமந்தாவிடம், ஒருவர், ஆரோக்கிமற்ற பிராண்ட் ஒன்றில் விளம்பர தூதராக சமந்தா இருந்தது குறித்து கேள்வி எழுபபியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/samantha17.jpg)
கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, அது கடந்த காலத்தில் நான் செய்த தவறு. உண்மை தான் வேண்டுமென்றே செய்யவில்லை. தெரியாமல் செய்த தவறு.
/indian-express-tamil/media/media_files/samantha45.jpg)
உண்மை தெரிந்தபிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்தவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்பான இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.