தனது உடல்சநிலை சரியில்லாத காரணத்தினால், அடுத்து தான் ஒப்பந்தமான அனைத்து படங்கள் மற்றும் வெப் தொடரில் இருந்து சமந்த விலகியதாக தகவல் வெளியான நிலையில், இந்த தகவலை சமந்த தரப்பு மறுத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தற்போது மயோசிடிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் மாதம் முதல் அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில்’, சமீபத்தில் இவர் நடிப்பில், யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சகுந்தலம், குஷி, ஆராத்தியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே தனது உடல்நிலையை காரணம் காட்டி சமந்தா தான் ஒப்பந்தமாக படங்கள் மற்றும் வெப் தொடர்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள சமந்தா தரப்பு, ஜனவரி இரண்டாம் பாதியில் அவர் சிட்டாடல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிவிக்கின்றன.
சிட்டாடல் ஒரு லட்சியத் தொடர், அமெரிக்க மற்றும் இந்திய என இது பல மொழிகளில் உருவாகிறது.. ஒரு இத்தாலிய பதிப்பும் தயராக இருப்பதாக கூறப்படுகிறது. அறிவியல் புனைகதையாகக் கருதப்படும் இந்தத் தொடரானது பேட்ரிக் மோரன் மற்றும் ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கி வருகின்றனர். இந்த தொடரின் இந்திய பதிவில், வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
தி ஃபேமிலி மேனின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இயக்க உள்ளனர். இந்த தொடரின் அமெரிக்க பதிப்பில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். கடந்த டிசம்பரில், சிட்டாடலின் தொடரின் இயக்குனர்கள் வருண் தவான் இந்த தொடரில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சிட்டாடல் ஒரு விதிவிலக்கான லட்சிய மற்றும் அற்புதமான தொடர்..
மேலும் இந்த அற்புதமான பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருப்பது, ருஸ்ஸோ பிரதர்ஸ் ஏஜிபிணு (AGBO) மற்றும் ஜெனிபர் சல்கே ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. இது எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணம்" என்று வருண் தவான் கூறியிருந்தார். இருப்பினும், இந்த தொடரில் சமந்தா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த தொடரில் நடிப்பதற்காக கடந்த ஆண்டு சமந்தா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சமந்தா, மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு தனது யசோதா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தான் நோயுடன் போராடுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது உடல்நிலை உயிருக்கு ஆபத்தாக இல்லை என்றும், தனது நோய் விரைவில் குணமடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே சமந்தாவும் தனது புராண படமாக சாகுந்தலம் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து குஷி என்ற காதல் படமும் உள்ளது. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு திரையரங்குகளுக்கு வரவுள்ளது. குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.