Advertisment
Presenting Partner
Desktop GIF

சாப்பாடா? தாம்பத்தியமா? சமந்தாவுக்கு பிடித்தது எது?

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

author-image
WebDesk
New Update
Samantha

சமந்தா

வாழ்க்கையில் உங்களுக்கு சாப்பாடு முக்கியமா அல்லது தாம்பத்தியம் முக்கியமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை சமந்தா எனக்கு தாம்பத்தியம் தான் முக்கியம் என்று கூறியுள்ள பழைய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வரும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்தியில் வெப் சிரீஸ் மற்றும் படங்களில் நடித்து வரும் சமந்தா தனது தொற்றுக்கு சிகிச்சையும் பெற்று வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பிறகு படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் சமந்தா, புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே சமந்தாவின் பழைய இன்டர்வியூ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், உங்களுக்கு சாப்பாடு முக்கியமா அல்லது தாம்பத்தியம் முக்கியமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தனது தாம்பத்தியம் தான் முக்கியம் என்று சமந்தா கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment