தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாவை விட ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒடிடி தளங்களில் பெரிதும் பிரபலமாகிவிட்டது என்று சொல்லாம். இதன் காரணமாக சினிமாவை போல் தற்போது ஒடிடி தளங்களுக்கென தனியாக படங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் புதியதாக வெளியாகும் திரைப்படங்கள் கூட குறிப்பிட்ட வாரங்களுக்கு பிறகு ஒடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும் ஒடிடி தளத்திற்காக தயாராகி வரும் படங்களில் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்களில் நடிக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சமந்தா
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தான் நடிகை சமந்தா. ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சமந்தா, தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்காக 4 கோடி சம்பளம் வாங்கிய சமந்தா தற்போது, சிட்டாடல் தொடருக்காக ரூ10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதிகா ஆப்தே
ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடரில் அதிகமாக காணப்படும் ராதிகா ஆப்தே, சீக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இவர் ஒரு வெப் தொடருக்கான ரூ4 கோடி சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுஷ்மிதா சென்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த சுஷ்மிதா சென் தற்போது ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு வெப் தொடருக்கு சம்பளமாக ரூ2 கோடி பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ராஷி கண்ணா
ஃபர்ஸி என்ற வெப் தொடரின் முலம் ஒடிடி நடிகையாக மாறியுள்ள ராஷி கண்ணா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். ராஜ் மற்றும் டி.கே இயக்கிய இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரஷி கண்ணா ஒரு வெப் தொடருக்கு 1.5 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியாமணி
ராஜ் மற்றும் டி.கே. இயக்கிய தி பேமிலி மேன் 1 மற்றும் 2-ம் சீசனில் மனோஷ் பீஜாபாயின் மனைவியாக நடித்தவர் பிரியாமணி. இவர் ஒரு வெப் தொடருக்கு அதிகபட்சமாக 10-20 லட்சம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“