/indian-express-tamil/media/media_files/2025/07/31/krish-and-sangeeta-2025-07-31-23-06-55.jpg)
பாடகர் க்ரிஷ், நடிகை சங்கீதா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், சங்கீதா தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்துகொண்டார் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறி்த்து சங்கீதாவே விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் க்ரிஷ். கடந்த 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் பூவும் புடிக்கிது என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் தான் க்ரிஷ். தொடர்ந்து, ஹாரிஷ் ஜெயராஜ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார்.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான தேவ் என்ற படத்தில் பாடல் பாடிய க்ரிஷ், சிங்கம் 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், படத்திற்கு இசையமைத்துள்ள அவர், கண்டேன் என்ற படத்தில் பாடலையும் எழுதியுள்ளார் சின்னத்திரையில், மகராசி சீரியலுக்கு இசையமைத்துள்ள க்ரிஷ் கடந்த 2009-ம் ஆண்டு நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சங்கீதாதான் என்னை காதலித்தார் என்று பாடகர் க்ரிஷ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இதனிடையே, க்ரிஷ் தன்னை விட சிறியவர் என்ற கருத்துக்கள் பரவி வருவது குறித்து பேசியுள்ள நடிகை சங்கீதா, வீட்டில் திருமணத்திற்காக வரன் பார்த்தபோது க்ரிஷ் மாதிரி ஒரு பையனை பாருங்க. எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னேன். உடனே எங்க அம்மா அவன் சின்ன பையன் மாதிரி இருக்கிறான் என்ற சொன்னார். அதெல்லாம் இல்லை அவரையே பாருங்கள் என்று சொன்னேன்.
நான் முதன் முதலில் க்ரிஷை பார்த்தபோது உன் வயது என்ன என்று தான் கேட்டேன். அவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். ஆகவே நான் வயதில் சிறியரை திருமணம் செய்யவில்லை என்று நடிகை சங்கீதா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.