சினிமாவில் இரு நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது அன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமாக இருந்தாலும், இன்றைய காலக்கட்ட சினிமாவில் அத்திபூர்த்தார் போல் நடக்கும் நிகழ்வாக உள்ளது. அதேபோலத்தான் நடிகைகளும் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கும்போது அவர்களுக்குள் எந்த அளவிற்கு நட்பு உள்ளது? அல்லது இருவருக்கும் ஈகோ உள்ளதா என்பதை கணிக்கவே முடியாது.
இதில் ஒரு சில நடிகைகள் விதிவிலக்காக இருப்பார்கள். அந்த வகையில் வகையில் பழம்பெரும் நடிகை சாவித்ரி – சரோஜா தேவி இடையே நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பிரபல பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் பார்த்தால் பசி தீரும் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இது குறித்து கூறியுள்ள சித்ரா லட்சுமணன், சாவித்ரி, சரோஜா தேவி இருவரும் பார்த்தால் பசி தீரும் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது அவரவர் வசனங்களை பேசிவிட்டு சாவித்ரி ஒருபக்கமும், சரோஜா தேவி ஒரு பக்கமும் போய் அமர்ந்துகொள்வார்கள். இருவரும் பேசிக்கொள்வே மாட்டார்கள். அதன்பிறகு பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அறிஞர் அண்ணா கலந்துகொண்டு விருது வழங்குவதாக இருந்தது. அப்போது சரோஜா தேவிக்கு திருமணம் ஆகியிருந்ததால் அவரால் விழாவுக்கு வர முடியவில்லை.
இதனால் படத்தின் கதாசிரியரான ஆருர்தாஸ் சாவித்திரியிடம் நிலைமையை எடுத்து சொல்லி இது அண்ணா கலந்துகொள்ளும் விழா. இந்த விவழாவில் நம்பந்தப்பட்ட நடிகை வராமல் இருந்தால் நன்றாக இருக்காது. அதனால் சரோஜா தேவிக்கு வழங்கப்படும் விருதை அவருக்கு பதிலாக நீங்கள் தான் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட சாவித்ரி, அது எப்படி அவங்க நடிச்சதுக்கு நான் வந்து விருது வாங்க முடியும், அவங்களையே வர சொல்ல வேண்டியதானே என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ஆருர்தாஸ் மீது இருந்த மரியாதையின் காரணமாக அந்த விழாவில் பங்கேற்ற சாவித்ரி விருதை பெற்றுக்கொண்டார். ஆனால் விழாவிற்கு வந்த அனைவரும் சாவித்ரி உள்ளே வரும்போது பெற்றால் தான் பிள்ளையா படத்தில் இவர் நடிக்கவே இல்லையே இவர் ஏன் இங்கு வருகிறார் என்று ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதன்பிறகு தான் அவர் சரோஜா தேவிக்கு பதிலாக வந்துள்ளார் என்பது தெரிந்துள்ளது. அந்த காலத்தில் நடிகைகளுக்குள் ஈகோ இருந்தாலும் ஒருவரை ஒருவர் ஆரோக்கியமான போட்டியாகவே பார்த்தனர்.
அதேபோல் தரக்குறைவான விமர்சனங்களை மற்றும் தடித்த வார்த்தைகள் இல்லாமல் தங்களுக்குள் ஓரளவு நட்பு கலந்த ஈகோவுடனே இருந்துள்ளனர். இதில் மறக்க முடியாத மற்றொரு விஷயம், சாவித்ரி கடைசி காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும், படப்பிடிப்புக்கு தன்னுடைய மகனுடன் செல்ல திட்டமிட்டு பெங்களூருவில், சாளுக்கிய ஓட்டலில் தங்கியுள்ளார். அப்போது அவர் காலை உணவு சாப்பிடவில்லை என்பதால்,மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அந்த ஓட்டல் நிர்வாகம், நடிகை சரோஜாதேவியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை கேட்ட சரோஜா தேவி உடனடியாக அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவை தொடர்பு கொண்ட சாவித்திரிக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.. சரோஜாதேவி எடுத்துக்கொண்ட முயற்சியால், சாவித்திரி தனி விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது. விசித்திரம்: 1959-ம் ஆண்டில் "கைராசி" ஷூட்டிங்கில் சரோஜாதேவியோடு முரண்பட்டு சண்டைக்குப்போன சாவித்திரிக்கு, கடைசியாக உதவி செய்தவரே சரோஜாதேவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“