scorecardresearch

Sun TV Serial: ஆதிரை கல்யாணம் எப்போ? ட்விஸ்டே அங்கேதான்..! ஓபனாக உடைத்த விசாலாட்சி

ஆதிரையின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை வரும் காலத்தில் பார்த்து புரிந்துகொண்டபிறகு ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்

Sathyapriya
பழம்பெரும் நடிகை சத்யபிரியா

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியல் குறித்து நடிகை வெளியிட்டுள்ள அப்டேட் ஒன்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் திருச்செல்வம் தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் விசாலாட்சி என்ற கேரக்டரில் பழம்பெரும் நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார்.

இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஆதிரையின் திருமணம் எப்போது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் நடிகை சத்யபிரியா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில் ஆதிரையின் திருமணம் பல மாதங்களாக இழுத்துக்கொண்டிருக்க என்ன காரணம் என்பது குறித்து பேசியுள்ளார்.

ஆதிரையின் திருமணத்தில் பெரிய கதை உள்ளது. அதனால் தான் இத்தனை மாதங்களாக இந்த ட்ராக் போய்க்கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு என்ன இப்படி சென்றுகொண்டிருக்கிறது என்று சலிப்பு தட்டினாலும், இதில் தான் மொத்த பிரச்சனையும் வர இருக்கிறது. அதேபோல் இனி இந்த சீரியலில் இருக்கும் மருமகள்கள் மாடர்னாக மாறப்போகிறார்கள். இதுவரை இருந்ததற்கும் இனி வரும் இவர்களின் கேரக்டர்களுக்கு பெரிய வித்தியாசம் இருக்கும்.

இந்த சீரியலில் ஆதிரையின் திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை வரும் காலத்தில் பார்த்து புரிந்துகொண்டபிறகு ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்று சத்யபிரியா கொடுத்து தகவல் சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress sathyapriya say about ethirneechal serial twist